சந்நிதியான் ஆச்சிரமம் திருகோணமலை ஆலயங்களுக்கு 300,000 ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது
திருகோணமலை – மூதூர் 02, பாலநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆவய கட்டிட கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதியும்,
திருகோணமலை – செல்வநாயகபுரம், உதயபுரி சுவாமி தந்திரதேவா குன்றம் ஶ்ரீ லிங்கேஸ்வரர் ஆலய கட்டிட கட்டுமானப் பணிக்காக 1ம் கட்ட நிதியாக 200,000 ரூபாவும் நேற்று 08/01/2025 புதன்கிழமை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
அத்தோடு சந்நிதியான் ஆச்சிரமம் கல்விச்செயற்றிட்ட உதவிகளாக திருகோணமலையில் விவேகானந்தா கல்லூரி, தி/சிங்கள மகா வித்தியாலயம், தி/உவர்மலை விவேகானந்த கல்லூரி, தி/அபேயபுர ஆரம்ப பாடசாலை, தி/கோனேஸ்வரா இந்துக் கல்லூரி , தி/செல்வநாயகபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 13 மாணவர்களுக்கு 53000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளால் வழங்கப்பட்டதுடன் திருகோணமலை – ஈச்சிலம்பற்று, விநாயகபுரம் ஶ்ரீ மாணிக்க விநாயகர் அறநெறிப் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
நேரடியாகச் சென்று பார்வையிட்டு அறநெறி மாணவர்களுக்கான சீருடைகள், மாதாந்த சத்துணவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம் மற்றும் மலசலகூடம் அமைத்து தருவதாகவும் தீர்மானிக்கப்பட்டன.