உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கைதாகியுள்ளவர்களில் 100 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 41 வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் 14 வழக்குகளும் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.