தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வீதியில் காட்டு யானை இருப்பதை கண்டு, அதிக வேகத்துடன் பின்நோக்கிச் செல்ல முயன்ற போது முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.