இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கங்கேயாய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (06) மாலை புல் வெட்டும் இயந்திரத்தின் இரும்புத் துண்டு உடைந்து தலையில் அடிபட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
விளையாட்டு மைதானத்தில் உழவு இயந்திரம் மூலம் புற்களை வெட்டிக் கொண்டிருந்த போது புல் வெட்டும் இயந்திரத்தின் இரும்புத் துண்டு உடைந்து அருகிலிருந்த நபரொருவரின் தலையில் அடிபட்டுள்ளது.
பலத்த காயமடைந்த நபர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.