கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சோதனையின் போது கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம், வைத்தியரின் சிபாரிசு, பிரதேச சபையின் சிபாரிசு, சுகாதார பரிசோதகரின் சிபாரிசு மற்றும் கால்நடைகளுக்கான நீர் மற்றும் உணவு காற்றோட்ட வசதி என்பதை ஏற்படுத்திக் கொடுக்காமை போன்ற குற்றத்தின் அடிப்படையில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.