வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று(6) நாள் தொழில் ஆசிர்வாதத்துடன் கடலில் இறக்கப்பட்டது.
வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க தலைவர் செபஸ்ரியன் இந்த வருடத்திற்கான நாள் தொழிலை கட்டைக்காடு மக்கள் சார்பாக முதன் முதலாக ஆரம்பித்துவைத்தார்.
பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளாரின் ஆசிர்வாதத்துடனும் ஊர்மக்களின் ஆதரவுடனும் இன்று காலை 07.30 மணியளவில் நாள் தொழில் கடலில் இறக்கப்பட்டது.
இதன் பிறகு ஏனைய மீனவர்களின் படகுகள் ஒவ்வொன்றாக தங்களுடைய மீன்பிடி நடவடிக்கைகளை இனிதே ஆரம்பித்தன.
குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை, கிராம மக்கள், கட்டைக்காடு கடற்றொழில் சங்க நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.