ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேட அதிரடிப் படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸை வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வழிமறித்த பொலிஸார் அதில் சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
அதனை உடமையில் வைத்திருந்த தென்பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.