புத்தசாசன சமயங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார திணைக்களத்தின் 39 ஆவது அரச விருது விழாவில் நாடகத்துக்கான கலாபூஷணம் விருது சுப்பிரமணியம் புத்திசிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, கொடுக்கிளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட புத்திசிகாமணி, தற்போது யாழ். நகரில் வசித்து வருகின்றார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலராகவும், சாவகச்சேரி நகர சபையின் செயலராகவும் கடந்த காலங்களில் இவர் பதவி வகித்துள்ளார்.
இவர் பாடசாலைக் காலத்தில் பல சிறுவர் நாடகங்களிலும், பின்பு நாட்டுக்கூத்து சமூக நாடகங்களிலும் நடித்ததுடன் பல நாடகங்களை எழுதியும் அரங்கேற்றியுள்ளார்.