மலையக மக்களுக்கான காணி உரித்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் நிலத்தின் அளவானது சிவில் சமூகங்கள், தொழிற்சங்கள் மற்றும் கம்பனிகள் உள்ளிட்ட தரப்பினருடன் பரந்துபட்ட கலந்துரையாடலின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களின் காலத்தின்போது, தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு காணி உரித்தைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக 10 பேர்ச் நிலத்தை இலவசமாக வழங்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்ட நிலையில் அச்செயற்றிட்டத்தின் எதிர்காலம் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலைய மக்களுக்கு காணி உரிமையை உறுதி செய்யும் வகையில் 10 பேர்ச் அளவுள்ள நிலத்தினை வழங்குவது சம்பந்தமான முன்மொழிவு காணப்படுகின்றது.
ஆனால் மக்கள் தற்போது 10 பேர்ச்சுக்கும் அதிகமான காணிகள் தேவையாக உள்ளது என்ற கருத்தினை முன்வைக்கின்றார்கள்.
குறிப்பாக, தங்களது பண்ணைகளையும் வீட்டுக்கு அருகில் முன்னெடுப்பதற்கு விரும்புகின்ற தரப்பினர் அதிகளவான நிலத்தினை எதிர்பார்க்கின்றார்கள் என்றார்.