நாட்டில் இரு வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தீரானந்த மாவத்தை பகதியில் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 06 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுனாவ மற்றும் மாதங்கவத்தை பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 05 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 05 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.