யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிர முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு சாதனை தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
டான் தொலைக்காட்சி குழுமம் வருடாந்தம் வழங்கும் சாதனையாளருக்கான உயர் விருதான சாதன தமிழன் விருது இம்முறை சந்நிதியான் ஆ்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு கடந்த 31/12/2024 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சந்நிதியான் ஆச்சிரமத்தில் அவ் விருது டான் தொலைக்காட்சி குழும முகாமைத்துவ பணிப்பாளர் குகதாசன் அவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சிகள் சந்நிதியான் ஆச்சிரம சைவ. கலை பண்பாட்டு பேரவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற அதிபருமான திரு சிவநாதன் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது. பஞ்ச புராண ஓதிதலுடன் ஆரம்பமான நிகழ்வில் வருடத்தின் முதல் நிகழ்வாக மங்கள வாத்திய இசை கச்சேரி நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்தே சாதனைத் தமிழன் விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அதன தொடர்ந்து அம்பாறை மாவட்ட ஆலயம் ஒன்றிற்கு அதன் கட்டத்தில் நிதிக்காக ரூபா 150000/- நிதி அன்பளிப்பும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள், சந்நிதியான் தொண்டர்கள், டான் தொலைக்காட்சி குழுமத்தினர் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
இதே வேளை சந்நிதியான் ஆச்சிரமம் பதுளை வேவெஸ்ஸ, 3ஆவது மைல் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய புனருத்தானம் மேற்கொள்வதற்கு 1ம் கட்ட நிதியாக ரூபா 200,000 ஆலய நிர்வாகத்திடம் மலையக சிறுவர் இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.