பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 மைல்கல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பனாமுர பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவராவார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிளைப்பின் போதே குறித்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
மேலும், பனாமுர பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.