உள்ளூர் வகை அரசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது. அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்தார்.
உள்ளூர் வெளியூர் அரிசிகளின் விலை மற்றும் தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை காரணத்தினாலே தற்போது பிரச்சினை நிலவுகின்றது.
கொழும்பில் வாங்கும் அரிசியை நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரும்போது அதற்கு போக்குவரத்து கூலி உள்ளிட்ட செலவுகள் ஏற்படுகின்றது. அவ்வாறு வரும்போது அதனை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்பனை செய்ய முடியாது. இதனை அரசாங்கம் கவனத்திற்கு எடுத்து செயல்பட வேண்டும்.
சம்பா கீரிசம்பா ,வெள்ளை பச்சை விற்பனையிலிருந்து நாங்கள் தற்காலிகமாக விலகி இருக்க வேண்டி வரும் – என்றார்.