இன்று (31) ஹப்புத்தளை வியாரகல பகுதியில் இருவர் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரணையில் இருந்து அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய வேன் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடையிலான வளைவில் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை வைத்தியசாலை மற்றும் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.