நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தீவகத்தின் கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் – நெடுந்தீவிற்கு விஜயம் செய்தார்.
இதன்போது புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள், கவனிப்பாரற்றுள்ள பொது கட்டடங்கள், பாவனையற்று காணப்படும் பொது இடங்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.