வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வானது தேசத்தின் கண் – தமிழ் மணி மானா மக்கீன், கலைஞர் – கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது. தொழிலதிபர் சமூக தீபம், அல்ஹாஜ் எம்.சீ. பஹார்தீன் நூலின் முதற் பிரதியையும், கலைஞர் அக்குறணை சஹாப்தீன் கௌரவப் பிரதியையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களும் விசேட அதிதியாக தொழிலதிபரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் எம்.ஏ.ஸீ. மஹ்ஸும் அவர்களும், கௌரவ அதிதிகளாக கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், முன்னாள் அல்ஹிதாயா அகதியா பாடசாலை அதிபர் ஜனாப் எம்.எச்.எம். நஸீர், அக்ரம் பவுன்டேசன் தலைவர் அல்ஹாஜ் ரீ.ஏ. முஹம்மத் அக்ரம், அப்துல்லாஹ் இன்டஸ்ட்ரீஸ் அன்ட் பெகேஜிங் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ. ஹசன் முபாரக், டிரான்ஸ் ஏஸியா தொழிலதிபர் எம்.வை.எம். முகர்ரம், தொழிலதிபர் எம்.ஏ.எம். இல்ஹாம், அமேசன் கல்லூரி நிறுவனர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
மௌலவி (நிலாமி) எம்.ஏ. ரம்ஸானின் கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் வரவேற்புரையை நிகழ்த்த, நிகழ்வின் தொடக்கவுரை மற்றும் ஆசியுரையை இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் கலாபூஷணம் அல்ஹாஜ். எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் (ஜே.பி) நிகழ்த்துவார். தொடர்ந்து தலைமையுரையை கலாபூஷணம் திக்குவல்லை ஸப்வான் நிகழ்த்த, வாழ்த்துரைகளை சத்திய எழுத்தாளர், கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி, திருமதி. வசந்தி தயாபரன் (தகவம்), தமிழ் தென்றல் அலி அக்பர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.
வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி அதிபர், ஜனாப் ஜே.எம். றாபில் அவர்கள் நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்த, ‘முன்னணிப் படைப்பிலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத்’ என்ற தலைப்பில் டாக்டர் எழுத்தாளர், ச. முருகானந்தன் கருத்துரை நிகழ்த்துவார். தொடர்ந்து தினகரன் வாரமஞ்சரி கவிதைப் பூங்கா முன்னாள் பொறுப்பாசிரியர் கவிஞர் ரஷீத் எம். றியாழ் கவி வாழ்த்தை வழங்குவார். நூல் பற்றிய நயவுரையை சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் முன்வைப்பார். அதனைத் தொடர்ந்து கலைஞர் திக்குவல்லை என்.எம். ஹிமாயத்துல்லா வாழ்த்துப் பாடலை இசைப்பார். ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை திக்வல்லை ஸும்ரி அழகுற தொகுத்து வழங்கவுள்ளார்.
சிறப்புப் பிரதிகள் பெறும் ஊடக அதிதிகளாக மூத்த பத்திரிகையாளர் ஜனாப் என்.எம். அமீன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் ஞானம் ஞானசேகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலைஞர் ராதா மேத்தா, வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி பிரதி முகாமையாளர் ஜனாப் எம். சித்திக் ஹனீபா, இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் திருமதி எம்.ஜே. பாத்திமா ரினூஸியா, தயாரிப்பாளர் ஜனாப் ஏ.எம்.எம். ரழீம், பாரம்பரியம் புகழ் ஜனாப் எம்.எஸ்.எம். ஜின்னா, வானொலிக் கலைஞரும் அறிவிப்பாளருமான ஆசிரியை ஸில்மியா ஹாதி, சிரேஷ்ட ஒலிபரப்பாளரான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், ரூபவாஹினி தயாரிப்பாளர் ஜனாப் முபாரக் முகைதீன், ஜனாப் ஏ.எம். தாஜ், ஒலிபரப்பாளர் ஜனாப் அஷ்ரப் அமீர், தினகரன் ஆசிரியபீட ஜனாப் ஷம்ஸ் பாஹிம், கே. ஈஸ்வரலிங்கம், விடிவெள்ளிப் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ், தமிழன் பிரதம ஆசிரியர் திரு சிவா ராமசாமி, வீடமைப்பு திணைக்களத்தின் ஊடகப் பிரிவு சிரேஷ்ட முகாமையாளரும் ஊடகவியலாளருமான அஷ்ரப் ஏ. சமத், ஊடகவியலாளர் ஜனாப் ஏ.எஸ்.எம். ஜாவித், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் ஸீஜீஸீ டோக் சொப் ஜனாபா ரினூஸா நௌஷாத், படப்பிடிப்பாளர் ஜனாப் முஹம்மது நஸார் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், கலாநிதி யூசுப் மரைக்கார், மாவனல்லை கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம்.எப்.எம். ஹனீப், சமூக சேவையாளர் ஜனாப் மஹ்ரூப் நழீம், ஜனாப் பயாஸ் அப்துல் ரஸாக், கவிஞர் யாழ். அஸீம், எழுத்தாளரும் சட்டத்தரணியுமான சடகோபன் இராமையா, இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத் தலைவர் ஜனாப் இம்ரான் நெய்னார், கவிஞர் ரவூப் ஹஸீர், எழுத்தாளர் சுதாராஜ், தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளர் கீதா கணேஷ், டாக்டர் ரவூப் ஹபீஸ், கவிஞர் சிந்தனைப் பிரியன் முஸம்மில், கண்ணகி கலாலய திரு. ஏ.கே. இளங்கோ, கலாபூஷணம் மஸீதா அன்ஸார், எழுத்தாளர் திருமதி பவானி சச்சிதானந்தம், பாடகியும் கவிஞருமான திருமதி அருந்தவம் அருணா ஆகியோர் சிறப்புப் பிரதி பெரும் அதிதிகளாக நிகழ்வில் கலந்து சிறப்பிப்பார்கள்.
கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், நண்பர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த வெளியீட்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்கள்.