வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் சந்தித்து வடமராட்சி கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் முதற்கட்டமாக அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் சில தொடர்பான அறிக்கையொன்றினை வழங்கியிருந்தனர்.
- சட்டவிரோத போதைப் பொருட்களை தடுப்பதோடு அதிகரித்து வரும் கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைக்கப்பட்டிருந்தாலும் அவை இடையிடையே சேதமடைந்து காணப்படுகின்றன. அவை திருத்தப்பட வேண்டும்.
- சோறன்பற்று – தாளையடி வீதியிலுள்ள மருதங்கேணி பாலம் புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
- நித்தியவெட்டை – கேவில் வீதி புனரமைக்கப்பட வேண்டும்.
- கட்டைக்காடு – இயக்கச்சி வீதி புனரமைக்கப்பட வேண்டும்.
- கொடுக்களாய் அபாய வெளியேற்றப் பாதை புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
- கேவில் வரை சேவையில் ஈடுபட வேண்டிய அனைத்து பேருந்து சேவைகளும் கேவில் வரை சேவையில் ஈடுபட வேண்டும்.
- கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரைக்கும் தற்போது இடம்பெறுகின்ற பேருந்து சேவைகளை விட இன்னொரு சேவையும் ஆரம்பமாக வேண்டும்.
- கேவில் தொடக்கம் பருத்தித்துறை வரை சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகள் நடைமுறைக்கு ஏற்றவாறு செம்பியன்பற்றுக்கு உள்ளே செல்தல்.
- மருதங்கேணி பொலிஸ் நிலைய போக்குவரத்து காவலர்கள் இரவு நேரமும் பணியில் ஈடுபட வேண்டும்
போன்ற விடயங்கள் வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.