வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 18 ஆயிரம் மில்லிமீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூவரசங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை பகுதியில் விசேட சுற்றிவளைப்பைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
இதன்போது உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் பெரல் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கான 18 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
………………