“இலங்கையில் மீண்டுமொரு வரிசை யுகம் ஏற்பட அநுர அரசு இடமளிக்காது. கோட்டாபய அரசின் வீழ்ச்சிக்கு வரிசை யுகமே பிரதான காரணமாக அமைந்தது.” – இவ்வாறு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தாம் நினைத்த மாதிரி தீர்மானங்களை கோட்டாபய அரசு எடுத்ததன் விளைவாகவே நாட்டில் அன்று வரிசை யுகம் தோன்றியது.
அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அந்த அரசை மக்கள் அணிதிரண்டு விரட்டியடித்தார்கள்.
நாட்டில் தற்போது உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு கிடையாது. எனினும், சில இடங்களில் உணவுப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலை இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. புத்தாண்டில் இந்த நிலைமை முடிவுக்கு வரும். உணவுப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் வயிற்றில் அடித்துப் பிழைப்பு நடத்த எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.