யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது இன்றையதினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் இன்றையதினம் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி. சகாதேவன் அவர்களின் நேரடியான அதிரடி கண்காணிப்பு நடவடிக்கையில் பனை மரங்களை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கையின் பிரகாரம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்புப் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுமுறைநாட்களான சனி மர்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாறு சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்படுவதாகவும் தெரிவித்த அவர் பனை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தாம் விரைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மக்கள் தமது தேவைகளுக்கு பனை மரங்களை வெட்டுவதற்கு பொருத்தமான பனை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு கூடிய திட்டம் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் அதுவரை மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதுடன் எந்தப் பகுதியிலாவது பனை மரங்கள் வெட்டுவதை அறிந்தால் மக்கள் உடனடியாக 0779273042 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்து|ள்ளார்.