தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் 7C 2216 விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த இழப்பை சமாளிக்கும் தைரியம் அவர்களுக்கு கிடைக்கட்டும்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.