இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா – 367’ என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பல் இந்தோனேஷிய கடற்படையின் சிக்மா – கோர்வேட் ரகத்தைச் சேர்ந்ததாகும். நேற்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.
ADVERTISEMENT
120 பணியாட்களைக் கொண்ட இந்தக் கப்பல் 9071 மீற்றர் நீளமுடையதாகும். இதன் கட்டளை அதிகாரியாக கப்டன் அனுகேரா அன்னுறுல்லா செயற்படுகின்றார்.
இக்கப்பல் நாட்டிலிருக்கும் காலத்தில் நாட்டின் முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ளதோடு, திங்களன்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.