பல்வேறு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டுனா, மெகரல் மற்றும் ஜெக் மெகரல்ஸ் ஆகிய டின் மீன்களுக்கே இவ்வாறு அதிபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோனால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 425 கிராம் எடையுள்ள டுனா ரக டின் மீன் 380 ரூபாவாக நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் 155 கிராம் மெகரல் டின் மீன் விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெக் மெகரல் 425 கிராம் டின் மீன் 560 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.