ஹப்புத்தளைக்கும் தியத்தலாவையிற்கும் இடையிலான ரயில் பாதையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தியத்தலாவை கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான கே.பி.அமல் இஷாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் கொழும்பு பதுளை புகையிரதங்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தாமதமாகச் சென்றதாக தெரியவருவதோடு இவ்விபத்து தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.