வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இணையத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, தனியார் போக்குவரத்து துறையினர் எதிர்கொள்ளும் நேர அட்டவணை பிரச்சினைகள், பேருந்து தரிப்பு நிலைய பிரச்சினைகள், தனியார் போக்குவரத்து துறையில் கடமை புரிபவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்படாமை, அரச போக்குவரத்து துறையினரின் நியாயமற்ற செயற்பாடுகள், தனியார் மற்றும் அரச போக்குவரத்து துறையினருக்கு இடையே அமைச்சு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையிடலின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரன், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.