நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் சிநேகபூர்வ உதைபந்தாட்டம் இடம்பெற்றது
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் இன்று மாலை 04.00மணிக்கு ஆரம்பமாகிய சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில்
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகம் மோதியது
போட்டியின் இறுதியில் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.சிநேக பூர்வ ஆட்டத்தின் வெற்றிக் கிண்ணத்தை அருணோதயா விளையாட்டுக் கழகத்தினருக்கு சென்மேரிஸ் வீரர்களால் வழங்கி வைக்கப்பட்டது