கெக்கிராவ நகரிலுள்ள உணவு விடுதிக்குச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் விடுதி முகாமையாளர் உட்பட மூவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெக்கிராவ திப்பட்டுவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
கெக்கிராவ மஹா வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளருக்கும் விடுதி முகாமையாளருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து விடுதி முகாமையாளர் உட்பட மூன்று ஊழியர்கள் குறித்த வாடிக்கையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.