காவேரி கலா மன்றத்தின் தயாரிப்பில் உண்மையின் தரிசனம் நாட்டுக்கூத்து நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
காவேரி கலா மன்றம் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை பண்பாட்டு விழுமியங்களோடு இணைத்து கூத்து வடிவத்தில் கடந்த 26 வருடங்களாக காவேரி கலா மன்றம் வருடம் தோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் உண்மையின் தரிசனம் யாழ்ப்பாணத்தில் மேசியா பூரண சுவிசேஷ சபை என்ற தேவாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ADVERTISEMENT
இந்த நாடகமானது காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் திரு.யோசுவா அவர்களின் எழுத்தாக்கம் மற்றும் நெறியாக்கத்தில் இடம்பெற்றது. பலநூறு மக்கள் வருகை தந்து, இந்த நாடகத்தை கண்டுகளித்தனர்.






