அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நெகுடுனுவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்யும் போது அவ்விடத்திலிருந்த மேலும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தப்பி சென்ற சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.