திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார்.
இரவு நேரத்தில் தனது பிள்ளையுடன் தூங்கி கொண்டிருக்கும் போது குறித்த யானைத் தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவித்தார். இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டு தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அடிக்கடி யானைத் தொல்லை ஏற்படுவதனால் அப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாது தவிர்க்கின்றனர். பாதுகாப்பான யானை வேலி இன்மையால் யானைத் தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.