பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைத்து தருமாறு கோரி வல்வெட்டித்துறை சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து மக்கள் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு பிரதேச மக்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலிகிழக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தியாகராஜா நீரோட்டம், பருத்தித்துறை, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், மற்றும் ஏனைய சங்கங்களின் தலைவர்கள், என பலரும் கலந்துகொண்டுள்ளனதுடன், வீதியால் செல்லும் மக்கள் குறித்த போராட்ட இடத்தில் தரித்து கையொப்பமிட்டு செல்வதனையும் அவதானிக்க முடிவதுடன், குறித்த போராட்டம் பிற்பகல் 5 மணிவரை கவன ஈர்ப்பு போராட்டமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.