கட்சியின் தோல்விக்கான அக புறக்காரணிகளை கண்டு அவற்றை செழுமைப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அமைப்பாளர்களை இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடிய முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகருமான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் மாகாண சபை தேர்தல் சில வேளை வேறு தேர்தல் கூட வரலாம் நாங்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று சொல்லி அனுபவத்தினூடாக ஜனநாயக சவால்களை எதிர்கொள்வது தான் ஆரோக்கியமான ஜனநாயகக்கட்சியின் அடிப்படைகள். ஆகவே வர இருக்கின்ற தேர்தல்களை எதிர்கொள்வதே நோக்கம் எனவும் கட்சியின் தேசிய மாநாடு வெகுவிரைவில் நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.