மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை வீதி மற்றும் புவக்வத்த ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (20) ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 28 வயதுடையவர்கள் ஆவர்.
மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 13 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கிராம் 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.