மட்டக்களப்பு கித்துள் பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியான விக்கினேஸ்வரன் சுஜிதா அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்தார்.
இந் நிலையில் குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வியாழக்கிழமை(19) உயிரிழந்துள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கிய இம் மாணவியின் இழப்பு அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.