பாதாள உலக கும்பலின் தலைவரான ‘குடு சலிந்து’ என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்ய பாணந்துறை மேலதிக நீதவான் சமன் குமார உத்தரவிட்டுள்ளார்.
கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் “குடு சலிந்து” பிணையில் விடுதலை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
“குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டதையடுத்து வழக்கு எண்கள் 96863 மற்றும் 85145/22 ஆகியவை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.