கல்கிசை, படோவிட்ட மற்றும் கட்டுகுருந்துவத்தை ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை(19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கல்கிசை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 , 29 வயதுடையவர்கள் ஆவர்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 10 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயின் , 05 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 06 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.