யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மட்டுவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு 10 மணியளவில் நாகபாம்பு ஒன்று உள்நுழைந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து அண்மைய வீட்டில் வசிப்பவரை வரவழைத்து குறித்த பாம்பை பிடித்து வெளியேற்றியுள்ளனர். இந்த நாகப்பாம்பின் உடற்தோற்றமானது (தோல்), சாதாரண நாகபாம்பினை விட சற்று வித்தியாசமாக காணப்பட்டது.