ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சமகால நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராயப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாகக் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுதல், அரசின் செயற்பாடுகள் மற்றும் அவை தொடர்பான கட்சியின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.