உடுப்பிட்டி இமையாணன் மேற்கு பகுதியில் அமையப்பெற்ற மதுபானசாலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது
இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த மதுபான சாலையானது அகற்றப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த மனுவை 32 பொது அமைப்புக்கள் சேர்ந்து தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், இந்த மதுபான சாலை ஏன் மூடப்படக் கூடாது என்பதற்கான காரணம் காட்டும் விசாரணை இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
இதனை தொடர்ந்து யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்….
கடந்த அரசினால் வழங்கப்பட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியல்களை தற்போதைய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றும், கற்காதவர்கள் நிதி கொடுத்து பெற்ற பட்டமே கலாநிதிப் பட்டம் என்றும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உங்களது அரசியலமைப்பை நடைமுறைப் படுத்துங்கள் என்று கூறியது தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.