இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அதிகபட்சமாக 30,000 மெற்றிக் தொன் பதப்படுத்தப்படாத உப்பை 2025 ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மன்னார் , புத்தளம் ,ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
எனவே, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டு மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.