இன்றையதினம், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏவி வீதி, அரியாலை பகுதியில் 60 ஆயிரம் மில்லிலீட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்துகின்ற உபகரணங்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.