கொழும்பு – கண்டி வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உந்துருளி ஒன்று கேகாலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான கெப் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது உந்துருளியின் செலுத்துனர் படுகாயமடைந்த நிலையில் வரக்காப்பொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.