நேற்று மாலை (15.12.2024) இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மோ.பாக்கியநாதன் (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்குறித்த இருவரும் நேற்றிரவு (15) 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றிருந்தனர். இதன்போது தனியார் பேருந்து ஒன்று வீதியால் சென்றுகொண்டிருந்தபோது தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார். மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், இன்று இளவாலை பொலிஸார் அவரை அவரை கைது செய்தனர். மரணம் குறித்தான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.