நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தனது கல்வித் தகைமை தொடர்பில் பிழையான தரவுகள் நாடாளுமன்ற தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(16) முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர்,
நான் ஒரு சட்டத்தரணி. 25 வருடங்கள் இத்துறையில் இருக்கின்றேன். எனவே, எனது பெயருக்கு முன்னால் நான் ஒருபோதும் கலாநிதி பட்டத்தை பயன்படுத்தியது கிடையாது. எனது பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற தகவல் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளது. எனினும், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் தவறான தகவல் உள்ளடக்கப்பட்டதா என்பது பற்றி விசாரிக்குமாறு கோரியே முறைப்பாடு செய்துள்ளேன்.” என்று குறிப்பிட்டார்.