லக்கல ரிவர்ஸ்டன் வீதியின் இழுக்கும்புர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் லக்கல பல்லேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி பிரதேசத்தில் இருந்து சுற்றுலாச் சென்றவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.