யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு சமூகநல செயற்பாட்டாளர் இரா.தயராஜ் ஏற்பாட்டில் புலம்பெயர் உதவுனர் ஒருவரது நிதியில் பத்து குடும்பங்களுக்கு தலா 5000/- பெறுமதியான உலர் உணவு பொதிகள் நேற்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அம்பன் கிராம சேவகர் பிரிவின் அம்பன் கிழக்கு கிராமத்தில் சுமார் 20 வரையான குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகள் இன்றி தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் வீடுகளில் தற்போதும் மழைநீர் தேங்கியுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.