திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் இன்றையதினம் (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அன்ரன் பிரஜித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.
குறித்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.