சூரிய நிறுவகத்தினால் நடாத்தப்படும், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் – சுதுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
மாலை அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல், விருது வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
சூரிய நிறுவகத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு. தே.பிரேமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் திரு.நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினர்களாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு.ஒலிவர் ப்ராஷும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும், சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் திரு.நவின் திஸாநாயக்கவும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனும் கலந்து சிறப்பித்ததுடன், இதில் ஏனைய விருந்தினர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்


















