கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் இன்று (15) அதிகாலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.