பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அந்தவகையில், பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் தேயிலை நிலங்களைப் பாதுகாத்துக் கொண்டு பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்குடன் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நெடுங்குடியிருப்புகளில் இரண்டு மாடிகளைக் கொண்டு இந்த வீடுகளை அமைப்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்களைத் தொடர்ந்தும் முழுமையாக பெருந்தோட்டங்களுக்குள் வைத்திருப்பதா? அல்லது அவர்களை அங்கிருந்து வெளியேற்றிக் கிராமங்களாக அவர்களைக் குடியமர்த்துவதா? என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.